மாவட்ட செய்திகள்

சாலை மராமத்து பணியின்போது முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் + "||" + Civilians involved in road blockade

சாலை மராமத்து பணியின்போது முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாலை மராமத்து பணியின்போது முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
கிராம மக்கள் இந்த சாலையை தார் மூலம் தான் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி லாரியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார் வெட்டு கிராமம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த சாலையில் மராமத்து பணி நடைபெற்றது. பணியாளர்கள் குண்டும், குழியுமான சாலையில் சிமெண்டு கலந்த கலவையை போட்டு கொண்டு வந்த போது கிராம மக்கள் இந்த சாலையை தார் மூலம் தான் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி லாரியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி; வைரபுரி பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கோட்டாட்சியரிடம் மனு
புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி வைரபுரி பொதுமக்கள் ஊர்வலமாக வந்து குளித்தலை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
2. ஆதார் புகைப்படம் எடுக்க, திருத்தம் செய்வதற்கு, டோக்கன் வாங்க விடிய, விடிய காத்திருக்கும் பொதுமக்கள்
ஆதார் புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்வதற்கும் டோக்கன் வாங்க பொதுமக்கள் விடிய, விடிய காத்திருப்பதால் கடும் அவதிப்படுகின்றனர்.
3. திருவள்ளூர் - பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
4. பெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைக்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைத்து தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை