மாவட்ட செய்திகள்

பேரிகை அருகே, கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 5 பேர் கைது + "||" + Near Perikai, Five arrested including women with cannabis

பேரிகை அருகே, கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 5 பேர் கைது

பேரிகை அருகே, கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 5 பேர் கைது
பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர், 

பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் பேரிகை - மாஸ்தி ரோடு புட்டப்பசாமி கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 4 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் ஒரு கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியை சேர்ந்த மாரக்கா (வயது 52), முனியம்மா (32), அமராவதி (32), பத்மா (60) ஆகிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக பேரிகை அண்ணா நகரை சேர்ந்த ஜொன்னப்பா என்கிற கொண்டன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேர் கைது
கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4. வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. குண்டூரில் மாணவர்கள் தங்கியுள்ள வீட்டின் பின்புறம் வளர்ந்த கஞ்சா செடிகள் அழிப்பு
குண்டூரில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீட்டின் பின்புறம் வளர்ந்த கஞ்சா செடிகளுடன், அவர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதையடுத்து கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.