மாவட்ட செய்திகள்

மரத்வாடா மண்டலத்தில் வறட்சியால் 3 விவசாயிகள் தற்கொலை + "||" + 3 farmers commit suicide due to drought in Marathwada zone

மரத்வாடா மண்டலத்தில் வறட்சியால் 3 விவசாயிகள் தற்கொலை

மரத்வாடா மண்டலத்தில் வறட்சியால் 3 விவசாயிகள் தற்கொலை
மராட்டியத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நின்ற பிறகும் பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
அவுரங்காபாத், 

மராட்டியத்தில் உள்ள மரத்வாடா மண்டலம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தொடர்ந்து மழை பொய்த்து வருவதால் இந்த மண்டலத்தை சேர்ந்த மேலும் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

பீட் மாவட்டம் கேவ்ரி தாலுகா சிராதேவி பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் ரவுத்(வயது 60). விவசாயியான இவர், கடும் வறட்சி காரணமாக கடன் தொல்லை அதிகரித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல் நாந்தெட், ஹிமாயத்நகர் தாரேகான் தன்கா பகுதியை சேர்ந்த தவ்ராவ் ரவுத்(35) என்பவரும் விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

மேலும் பர்பானி மாவட்டம் புர்னா தாலுகா துதடே கிராமத்தை சேர்ந்த முர்லிதர் சோன்கவாலே(22) என்ற விவசாயியும் துக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் தற்கொலை விவகாரம்: உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசை பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.