மாவட்ட செய்திகள்

உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்து + "||" + Mannargudi Rajagopalaswamy Temple on World Elephants Day

உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்து

உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்து
உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள், இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மன்னார்குடி,

உலக யானைகள் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலத்துக்கு மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் மாலை அணிவித்து பழங்கள், கீரை, வகைகள் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அரிமா சங்க தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மீனாட்சி சூரியப்பிரகாஷ், கண்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செங்கமலம் யானையை பராமரித்து வரும் யானைப்பாகன் ராஜா, துணைப்பாகன் கார்த்தி ஆகியோரையும் பாராட்டினர்.


விழிப்புணர்வை ஏற்படுத்த...

இதுகுறித்து ஓய்வு பெற்ற கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பால கிருஷ்ணன் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்திலேயே செங்கமலம் யானை மட்டுமே உள்ளது. தனது இனத்தை விட்டு பிரிந்து மனிதர்களுக்காக கோவில்களில் ஆன்மிக பணியை மேற்கொண்டு வருகின்ற யானைகளுக்கு பக்தர்கள் தொல்லை தரும் வகையில் நடக்கக் கூடாது. அதனை நேசிக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கு கீரை, பழங்கள் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட சத்து மிகுந்த, விரும்பி சாப்பிடுகின்ற உணவு பொருட்களை பக்தர்கள் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அட்சதை தூவி வாழ்த்திய பொதுமக்கள்
மழை வேண்டி தவளைகளுக்கு நடந்த திருமணத்தில், அட்சதை தூவி பொதுமக்கள் வாழ்த்தினர்.
2. பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து
பாகிஸ்தான் அணிக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.
4. மாநில முன்னேற்றத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது; மே தின வாழ்த்து செய்தியில் நாராயணசாமி தகவல்
புதுவை மாநிலம் வேகமாக முன்னேறுவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது என்று மே தின வாழ்த்து செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
5. பிளஸ் 2 தேர்வு; மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோவில் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோ வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.