மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரித்தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள் + "||" + Nirumrumal in the Srirangam Mamamandapam disrupted Kavirathai

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரித்தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரித்தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரித்தாய்க்கு நம்பெருமாள் சீர்வரிசை பொருட்களை கொடுத்தார்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரித்தாய்க்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.


அதன்படி இந்தாண்டு ஆடி 28-ம் நாளான நேற்று காவிரித்தாய்க்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி முற்பகல் 11.30 மணிக்கு அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

நம்பெருமாள் சீர்வரிசை

அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நம்பெருமாள் காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. அப்போது பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலையை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை