புதுக்கோட்டையில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டிகள் வீரர்- வீராங்கனைகள் 150 பேர் பங்கேற்பு


புதுக்கோட்டையில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டிகள் வீரர்- வீராங்கனைகள் 150 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:05 PM GMT)

புதுக்கோட்டையில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வீரர்கள், வீராங்கனைகள் 150 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சார்பில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை தாங்கி தாங்கினார்.

இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு செயலாளர் பழனிச்சாமி, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தங்கத்துரை, பெண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் மாலதி, மாவட்ட நீச்சல் சங்கத்தின் தலைவர் முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 150 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப் படுத்தினார்கள்.

பரிசு-சான்றிதழ்கள்

இதில் பிரி ஸ்டைல், பேக் ஸ்டைல் உள்பட 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜான் பார்த்திபன், உடற்பயிற்சி பயிற்றுனர் ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story