மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கலெக்டர் பார்வையிட்டார் + "||" + The police parade rehearsal collector visited Independence Day

சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கலெக்டர் பார்வையிட்டார்

சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கலெக்டர் பார்வையிட்டார்
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
வேலூர்,

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன. வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.


காலை 9.10 மணிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின்னர் அவர், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அத்துடன் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,450 போலீசார் வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி காலை 11 மணி அளவில் வேலூர் கோட்டை வளாகம் மற்றும் கொத்தளம், காந்திசிலை, ஜலகண்டஸ்வேரர் கோவில் ஆகிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. பாதுகாப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
2. அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்
அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால் களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3. கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கலெக்டர் தகவல்
கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
4. ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல்
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
5. திருச்சி என்.ஐ.டி.யில் பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருச்சி என்.ஐ.டி.யில் பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.