மாவட்ட செய்திகள்

சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் + "||" + The Collector provided Rs.1.5 crore welfare assistance to 175 persons at Independence Day

சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
தஞ்சையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.
தஞ்சாவூர்,

சுதந்திரதின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உடன் சென்றார்.


பின்னர் கலெக்டர், சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கவுரவித்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் கதர் ஆடை அணிவித்தார். தொடர்ந்து அவர், மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் போரில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த படை வீரர்களின் குடும்ப பராமரிப்பு மானியமாக 3 பேருக்கு ரூ.75 ஆயிரமும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளும், 2 பேருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளும், 7 பேருக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டது.

தாட்கோ மூலம் 5 பேருக்கு வாகன மானியமாக ரூ.33 லட்சத்து 97 ஆயிரத்து 386-ம், கறவை மாடுகள் மானியமாக 6 பேருக்கு ரூ.10 லட்சமும், டிபார்மென்ட்ல் ஸ்டோர் மானியமாக 2 பேருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரமும், போர்வெல் மானியமாக 2 பேருக்கு ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 995-ம் வழங்கப்பட்டது.

வேளாண்மைத்துறை

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களும், வேளாண்மைத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.42 ஆயிரத்து 600-ம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்து 520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 பேருக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், ஒருவருக்கு விலையில்லா தையல் எந்திரமும் வழங்கப்பட்டன.

வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான நிதிஉதவி என 7 பேருக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பசுமை வீடுகள் கட்ட 5 பேருக்கு ரூ.10½ லட்சமும், பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட 4 பேருக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மீன்வளத்துறை

தொழிலாளர் நலத்துறை சார்பில் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியம் என 10 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 56 பேருக்கும், சமூக நலத்துறை சார்பில் 10 பேருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 3 பேருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒருவருக்கும், மீன்வளத்துறை சார்பில் ஒருவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 20 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த 71 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 175 பேருக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.