மாவட்ட செய்திகள்

மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி + "||" + Moped-motorcycle collision: Plaintiff kills

மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
தஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள குருங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கருப்பையன் (வயது22). இந்தநிலையில் சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கருப்பையன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் குருங்குளத்தில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஏழுப்பட்டியில் இருந்து மருங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மொபட் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.


விசாரணை

இதில் படுகாயமடைந்த கருப்பையனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
2. தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்
தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
4. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
5. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.