திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு வரவேற்பு
வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை புதிய மாவட்டமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று திருப்பத்தூர் நகருக்கு வருகை புரிந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்து, மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலாசுப்பிரமணியம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், கந்திலி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம், நகர அவைத்தலைவர் ரங்கநாதன், நகர துணைச் செயலாளர் ஆனந்தன், வீடியோ சரவணன், சோடா வாசு, சந்திரமோகன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது :-
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஜெயலலிதா அரசு நிறைவேற்றியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எந்த ஏரியாவில் கலெக்டர் அலுவலகம் அமைக்கலாம், எத்தனை தாலுகாக்கள் சேர்க்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.
மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 ஆக பிரிக்க வேண்டும் என நான் தமிழக முதல்-அமைச்சரிடம் கூறியதற்கு அவர் தாய் உள்ளத்துடன் இதனை செய்து கொடுத்தார். இதற்காக அவருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story