மாவட்ட செய்திகள்

விற்பனையாளர் படுகொலையை கண்டித்து, கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Karur TASMAC Staff union demonstration

விற்பனையாளர் படுகொலையை கண்டித்து, கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விற்பனையாளர் படுகொலையை கண்டித்து, கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விற்பனையாளர் படுகொலையை கண்டித்து கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,

மாவட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜதுரை மற்றும் ராஜேஸ் கண்ணன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை படுகொலை செய்த நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இறந்த ராஜாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்
அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டத்தில் அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.