ராணிப்பேட்டை மின் வாரிய அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம்-பொருட்கள் திருட்டு - பூட்டை உடைத்து மர்மநபர்கள் துணிகரம்


ராணிப்பேட்டை மின் வாரிய அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம்-பொருட்கள் திருட்டு - பூட்டை உடைத்து மர்மநபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 8:30 PM GMT)

ராணிப்பேட்டை அருகே மின் வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த போன், கைக்கெடிகாரங்கள் உள்ளட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை பாரதி நகர் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவர் திமிரி பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 12-ந் தேதி செல்வம் வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் முன் பக்க கேட் திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அது குறித்து செல்வத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செல்வம் நேற்று முன்தினம் ஊரிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டின்முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், ரூ.80ஆயிரம் மதிப்பிலான ஐ போன், விலை உயர்ந்த 4 கைக்கெடிகாரங்கள் உள்பட பல பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக செல்வம் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Next Story