ஏத்தாப்பூரில், 20-ந் தேதி விவசாயிகளுடன், முதல்-அமைச்சர் கலந்துரையாடல் - முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு


ஏத்தாப்பூரில், 20-ந் தேதி விவசாயிகளுடன், முதல்-அமைச்சர் கலந்துரையாடல் - முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2019 5:00 AM IST (Updated: 18 Aug 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

ஏத்தாப்பூரில், 20-ந் தேதி விவசாயிகளுடன், முதல்-அமைச்சர் கலந்துரையாடுகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏத்தாப்பூர் அபிநவம் ஏரியை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20-ந் தேதி பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான இடத்தையும், முன்னேற்பாடு பணிகளையும், அபிநவம் ஏரியையும் சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் கவுதம், மாவட்ட திட்ட அலுவலர் அருள் ஜோதி அரசன், பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் மெடிக்கல் ராஜசேகர், ஏத்தாப்பூர் குமார், ஏத்தாப்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story