மாவட்ட செய்திகள்

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு + "||" + Official Inspection at Thiruvarur Seed Testing Station

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு
திருவாரூரில் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார்.
திருவாரூர்,

மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விதை சான்று துறையின் பணிகள் குறித்து கோவை விதைசான்று இயக்குனர் நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார். முன்னதாக திருவாரூரில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைச்சான்று நடைமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகின்றதா? அனைத்து விதைகளின் தரங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பா சாகுபடி பருவத்திற்கு விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக நீண்டகாலம் மற்றும் மத்திய கால நெல் ரகங்களை கால தாமதமின்றி சான்று பணியை மேற்கொண்டு விதை வினியோகத்திற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து விதை சான்று அலுவலர்கள், விதை சுத்திகரிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


விதைபரிசோதனை நிலையம்

இதனை தொடர்ந்து விதை பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் சான்று விதை மாதிரிகள், விதைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியவை கணக்கிடப்படும் முறைகளையும், அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதையும்் நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அவருடன் விதை ஆய்வு இணை இயக்குனர் சேகர், துணை இயக்குநர் கல்யாணசுந்தரம், விதைசான்று உதவி இயக்குனர் ஜெயசீலன், விதைச்சான்று அலுவலர்கள் அரவிந்த், சதீஸ், விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.