திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் கைது


திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 3:15 AM IST (Updated: 19 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, 

செங்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த முபாரக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் கேட்டு உள்ளனர். அப்போது இளம்பெண் மைனர் என்பதால் தற்போதைக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என அவரது பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காது வலியால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவர் புறநோயாளிகள் பிரிவில் காத்திருந்த போது முபாரக், அவரது தந்தை மூசா (வயது 50), தாய் மும்தாஜ் மற்றும் உறவினர் ஜாசின் ஆகியோர் அங்கு வந்து இளம்பெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூசா, மும்தாஜ், ஜாசின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற முபாரக்கை தேடி வருகின்றனர். 

Next Story