மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது + "||" + 2 youth arrested for raiding in Ramanathapuram

ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல் வழிமறித்து பணம், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொள்வதுடன் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த வழிப்பறி சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தின்போது போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு துத்திவலசையை சேர்ந்த குருசரண் என்பவரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தபோது அந்த கும்பலிடம் இருந்த செல்போனை குருசரண் தற்செயலாக பறித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, குகனேஸ்வரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.

இதன்படி குருசரண் கொடுத்த செல்போன் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக சென்றுவந்த பகுதிகளில் அந்த வழியாக சென்றவர்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்த பெருங்குளம் மேற்குத்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் இளையராஜா (வயது 24), அழகன் குளம் செட்டிமடை செல்வம் மகன் ரஞ்சித்(20) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் குருசரண் மற்றும் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் அப்துல்சுக்கூர் உள்ளிட்ட 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அரிவாளால் தாக்கியும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது இவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களின்போது உடனிருந்த ஆற்றங்கரை காலனியை சேர்ந்த முனீஸ் என்பவரையும் போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த கும்பல் பிடிபட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் அருகே பயங்கரம்: சுவரில் தலையை மோதி ரெயில்வே ஊழியர் கொலை; தங்க மோதிரத்துக்காக ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
சுவரில் தலையை மோதி, ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்டார். தங்க மோதிரத்துக்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீரை தற்போது திறக்க வேண்டாம் - விவசாயிகள் வேண்டுகோள்
விவசாய பணிகள் தொடங்காததாலும், வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் தற்போதைய நிலையில் ராம நாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3. ராமநாதபுரம் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கிய சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
ராமநாதபுரம் அருகே துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ராமநாதபுரம் அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த துப்பாக்கி - தோட்டாக்களை வீட்டில் பதுக்கிய பெண் - கைது செய்து தீவிர விசாரணை
இலங்கைக்கு கடத்து வதற்காக துப்பாக்கி, 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
5. அடுத்தடுத்து 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: மோட்டார்சைக்கிளில் தப்பிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
செங்குன்றத்தில் அடுத்தடுத்து 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துவிட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.