நாகர்கோவில் பயிற்சி மையத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்
நாகர்கோவிலில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
நாகர்கோவில்,
நாகர்கோவில் புன்னை நகரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் பணிகள் முடிந்ததும் வழக்கம் போல கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்தை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கம்ப்யூட்டர்கள் நாசம்
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்குள் அதிரடியாக நுழைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும் பயிற்சி மையத்தில் வைத்திருந்த சுமார் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த சில மரப்பொருட்களும் தீயில் கருகின. மின்கசிவு காரணமாக கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் தீ பிடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story