பரமக்குடி அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து நகை-பணம் கொள்ளை
பரமக்குடி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6¼ பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.35,000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 750 என கூறப்படுகிறது. பின்பு வீட்டின் முன்புற கதவை திறந்து வெளியே வந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிந்த மணிகண்டனையும், அவரது மனைவியையும் உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story