சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:15 PM GMT (Updated: 20 Aug 2019 7:40 PM GMT)

சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி திருநாலூரை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவரது மகன் சமரசம் (35). விவசாயி. வசந்தாவுக்கு திருநாலூரில் சொந்தமாக நிலம் உள்ளது. இதையடுத்து சமரசம் அந்த நிலத்தை தனக்கு கொடுக்கும்படி தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 10.9.2015-ந் தேதி இரவு சமரசம் தன் தாயிடம் சொத்தை தனக்கு தரும்படி கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சமரசம் வீட்டின் சமையலறையில் இருந்த ஊதாங்குழலை எடுத்து வசந்தாவின் தலையில் அடித்துள்ளார். இதில் வசந்தா படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக இறந்தார்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து சமரசத்தை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அளித்த தீர்ப்பில், தாயை கொலை செய்த குற்றத்திற்காக சமரசத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து சமரசத்தை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story