ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிக்க முயற்சி பெண் கைது


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிக்க முயற்சி பெண் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 3:45 AM IST (Updated: 22 Aug 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள அறமங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி விஜயலெட்சுமி (வயது 65). இவர் அறமங்காட்டில் இருந்து முத்துப்பேட்டைக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். முத்துப்பேட்டை சுங்க இலாக்கா அலுவலகம் அருகே பஸ் வந்தபோது அதே பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர், விஜயலெட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார்.

அப்போது அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

பெண் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மஞ்சுநாதன் மனைவி மேரி (32) என்பதும், விஜயலெட்சுமியின் சங்கிலியை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேரியை கைது செய்தனர்.

Next Story