மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் பழுது திருச்சிக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தது


மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் பழுது திருச்சிக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தது
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:21 PM GMT)

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதுகாரணமாக திருச்சிக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

செந்துறை,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு திருச்சியை நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அரியலூர் அருகே ஆர்.எஸ்.மாத்தூர் என்ற இடத்திற்கு வந்தபோது, என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென்று நின்றது.

நீண்டநேரமாக ரெயில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். என்ஜின் பழுதானது குறித்து விருத்தாச்சலம் ரெயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டது. பழுதான என்ஜினுக்கு பதில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் அந்த ரெயில் திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தது.

2 மணி நேரம் தாமதம்

வழக்கமாக மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.50 மணிக்கு வந்து சேரும். ஆனால் நேற்று முன்தினம் மேல்மருவத்தூர் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தென்மாவட்டங்களுக்கு வந்த அனைத்து ரெயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தது. இந்நிலையில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக வந்து கொண்டிருந்த நிலையில், என்ஜின் பழுதானதால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக திருச்சி வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story