மாவட்ட செய்திகள்

கிளித்தான்பட்டறையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் + "||" + Kilittanpattarai Pond Durawari aligns Young people at work

கிளித்தான்பட்டறையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

கிளித்தான்பட்டறையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
காட்பாடி பகுதியில் உள்ள கிளித்தான்பட்டறை தாமரைகுளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர். இதனை ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட தொழில்நுட்ப அலுவலர் பிரசன்னகுமார் பண்டிட் பார்வையிட்டார்.
காட்பாடி, 

காட்பாடி தாலுகா கிளித்தான்பட்டறையில் 3.31 ஏக்கர் பரப்பளவில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர் அசுத்தமாகவும், தாமரை செடிகள், முட்செடிகள், புதர்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் காணப்பட்டது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து வினோத் தலைமையில் 20 இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் நேற்று பொதுமக்களுடன் இணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக குளத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வார தொடங்கினர். பல்வேறு கட்டங்களாக குளம் தூர்வாரப்படுவதாகவும், குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு நடைபாதை அமைக்கப்படுவதாகவும் இளைஞர் குழுவினர் தெரிவித்தனர்.

இப்பணியை புதுடெல்லியை சேர்ந்த ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட தொழில்நுட்ப அலுவலர் பிரசன்னகுமார் பண்டிட் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், “ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளை சீரமைக்க முன்வர வேண்டும். குடிநீர் என்பது அத்தியாவசியமானது. அதனை பாதுகாக்க வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்” என்றார்.

அவருடன் 100 நாள் வேலை உதவி திட்ட அலுவலர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், திருமால், பாஜமதி, வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன், உதவிசெயற்பொறியாளர்கள் பாஸ்கரன், நித்யானந்தம், உதவிபொறியாளர் செல்வராஜ், சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதேபோன்று காட்பாடி பவானிநகரில் ‘சுவாசம்’ திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனை ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட அதிகாரி மற்றும் வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
2. சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 84 வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 84 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
3. தூர்வாரும் பணியின்போது அம்புக்கோவில் இளமாக்கி குளத்தில் 9 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - மழைநீரில் மூழ்கியது
கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள இளமாக்கி குளத்தை தூர்வாரும்போது, அதில் 9 உறை கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது கனமழை பெய்ததால், அந்த உறை கிணறுகள் மழைநீரில் மூழ்கியது.
4. நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
5. வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்த இளைஞர்கள்
கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீர் சேமிக்கும் பணியில் இளைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.