விபத்தில் உயிரிழப்புகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்கள் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
விபத்தில் உயிரிழப்புகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தும், அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வாகன சோதனை நடக்கும் இடங்களில் அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையை மாற்றி அமைக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இ-செலான் எந்திரம் மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று முன் தினம், சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் இ-செலான் முறை தொடங்கப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அறிமுகப்படுத்தி இன்ஸ்பெக்டர்களிடம் இ-செலான் எந்திரத்தை வழங்கினார்.
அப்போது அந்த வழியாக சாலை விதிமுறைகளை மீறியும், ஹெல்மெட் அணியாமலும் வந்த வாகன ஓட்டிகள் ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களிடம் புதிதாக வழங்கப்பட்ட இ-செலான் எந்திரங்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்து அதற்கான ரசீதுகளும் அங்கேயே வழங்கப்பட்டது.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்போது அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், முறைகேடு தொடர்பாக எழும் புகார்களை தவிர்க்கவும், மின்னணு எந்திரத்தை பயன்படுத்தி அபராதம் விதிக்கும் நடைமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-செலான் எந்திரம் அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் கொடுக்கப்பட உள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 283 பேரும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 175 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் முடிய ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 54 ஆயிரத்து 225 பேர் மீதும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 1,043 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 ஆயிரத்து 261 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்புகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூரை அடுத்த காக்களூர், தண்ணீர்குளம் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, போக்குவரத்துதுறை இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story