ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம், விருதுநகர், ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர், ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து விருதுநகரில் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகர தலைவர் வெயிலுமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் நாகேந்திரன், திலக், வள்ளிக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேரு பவனத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காந்தி சிலை ரவுண்டானா அருகே அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைதொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story