கீரனூர், திருவேங்கைவாசல், வெம்மணியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


கீரனூர், திருவேங்கைவாசல், வெம்மணியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:30 PM GMT (Updated: 22 Aug 2019 8:09 PM GMT)

கீரனூரில் பேரூராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கீரனூர்,

கீரனூரில் பேரூராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 91 மனுக்கள் பெற்றார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இதில் குளத்தூர் துணை வட்டாட்சியர் ராமசாமி, கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி, கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலுப்பூர் தாலுகா திருவேங்கைவாசலில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் வருவாய் ஆய்வளர் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அதிகாரி ரவி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விராலிமலை தாலுகா வெம்மணி கிராமத்தில் நடந்த முகாமிற்கு விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணகுமார் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். நீர்பழனி வருவாய் ஆய்வாளர் ஜோதி நிர்மலாராணி வரவேற்றார். இதையடுத்து பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 122 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் வெம்மணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேலாயுதம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story