குளித்தலை குறுவட்ட அளவிலான கபடி போட்டி 92 அணிகள் பங்கேற்பு


குளித்தலை குறுவட்ட அளவிலான கபடி போட்டி 92 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:15 AM IST (Updated: 23 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் 92 அணிகள் பங்கேற்றன.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய் பீம்ராணி தொடங்கி வைத்தார். இதில் லாலாபேட்டை, ஜீ. உடையாப்பட்டி, கொசூர், ஆர்.டி.மலை உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 92 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளால் போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கரூர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர். அந்த போட்டி நடத்துவதற்கான இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கபடி போட்டியை பஞ்சப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர்.

Next Story