வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் மனு


வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் மனு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:15 AM IST (Updated: 25 Aug 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர். அப்போது அங்கிருந்த தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்களை கொடுத்தனர். அதில், வடக்கு மாதவி ஏரிக்கரையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பெறவில்லை என்றும், எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்.

Next Story