கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது


கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. அப்போது மகா கணபதி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பல்லக்கு சேவை

விழாவில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் விநாயகர் வீதி உலா நடக்கிறது. வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மகா அபிஷேகம், தீர்த்தவாரி நடக்கிறது.

இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 4-ந் தேதி கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. மேலும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கணபதி அக்ரஹாரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள். 

Next Story