அழிக்கால் பகுதியில் வீடுகளில் 2-வது நாளாக மணல் குவியல் அகற்றம்
ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதிகளில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதிகளில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டனர். தூண்டில் வளைவு அமைக்க கோரி சாலை மறியலும் நடந்தது. விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
வீடுகளில் கடல்நீர் புகுந்த போது, அதனுடன் மணலும் சேர்ந்து வந்தது. இதனால் பல வீடுகளுக்குள் மணல் குவியல், குவியலாக காட்சி அளித்தது. அழிக்கால் பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று 2-வது நாளாக மணல் குவியல் அகற்றும் பணி நடந்தது. கடல்நீர் மீண்டும் ஊருக்குள் புகாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக பொக்லைன் எந்திரம் உதவியுடன் தாழ்வான பகுதிகளில் மணலை கொட்டி மேடாக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜநம்பி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

Related Tags :
Next Story