உதயன்ராஜே போசலே எம்.பி. பா.ஜனதாவில் இணைந்தால் மகிழ்ச்சி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
உதயன்ராஜே போசலே எம்.பி. பா.ஜனதாவில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
உதயன்ராஜே போசலே எம்.பி. பா.ஜனதாவில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
சத்தாரா எம்.பி.
சத்தாரா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. உதயன்ராஜே போசலே. சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான இவர் மராட்டியத்தில் தற்போதுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேரில் ஒருவராவார். இவர் பா.ஜனதாவில் இணையப்போவதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்-மந்திரி
தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே சத்தாரா வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். முந்தைய அரசுகள்(காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) ஒன்றும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே அவர் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில் அவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ரத யாத்திரையில் உள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
நன்றி கூறுகிறேன்...
நான் அவருக்கு (உதயன்ராஜே போசலே) நன்றி கூறுகிறேன். அவர் சொன்னது உண்மைதான். அவர் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இருந்து வருகிறார். சத்தாரா மற்றும் மராட்டிய மேற்கு மண்டலத்துக்காக எங்கள் அரசு செய்துள்ள வளர்ச்சி பணிகளை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் செய்யவில்லை. முன்பும் நாங்கள் செய்த வளர்ச்சி பணிகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேருவது குறித்து இனி முடிவு செய்யவேண்டும். அவ்வாறு எங்களிடம் வந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story