பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:50 PM GMT (Updated: 24 Aug 2019 10:50 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்யாண்-தானே

மத்திய ரெயில்வே வழித்தடமான கல்யாண்-தானே இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.54 மணி முதல் பிற்பகல் 3.52 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் கல்யாண்-தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் கல்யாண்-தானே இடையே உள்ள அனைத்து ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். தானேக்கு பிறகு விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் ரெயில்கள் 20 நிமிடங்கள் காலதாமதமாக இயங்கும்.

துறைமுக வழித்தடம்

துறைமுக வழித்தடத்தில் குர்லா-வாஷி இடையே காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. இந்த நேரத்தில் குர்லா-சி.எஸ்.எம்.டி மற்றும் வாஷி-பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வேயில் போரிவிலி-பயந்தர் இடையே காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் விரைவு ரெயில்கள் அனைத்தும் போரிவிலி-பயந்தர் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். போரிவிலி-பயந்தர் ரெயில் நிலையங்களுக்கு பிறகு மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story