தஞ்சை பகுதியில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம்
தஞ்சை பகுதியில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி செயல் அதிகாரி அண்ணாதுரை தலைமையில் நடந்தது. நிலவள வங்கி தலைவர் சோழபுரம் க.அறிவழகன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 75-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பகவதி சங்கர், அ.தி.மு.க. நிர்வாகிகள் லெனின், கோவி.கேசவன், பத்ம.குமரேசன், வாசு, பொன்னையன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலியமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் மண்டல துணை தாசில்தார் ஹெலன்ஜாய்ஸ், வருவாய் ஆய்வாளர் கோபால்தாஸ், சார் ஆய்வாளர் மூகாம்பிகை, கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபன், அம்மாப்பேட்டை உதவி தோட்டக்கலை அலுவலர் வரதராஜன், ஆலங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குணசேகரன், சாலியமங்கலம் வேளாண்மை உதவி அலுவலர் அண்ணாமலை, ஊராட்சி செயலாளர் நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நெய்தலூர்
மெலட்டூர் அருகே உள்ள நெய்தலூர் கிராமத்தில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் தனி தாசில்தார் குமார் தலைமையில் நடந்தது. மெலட்டூர் வருவாய் ஆய்வாளர் கலையரசி முன்னிலை வகித்தார். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 30 பேர் மனுக்களை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நெய்தலூர் கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி மற்றும் கிராம உதவியாளர்கள் செய்து இருந்தனர். சுவாமிமலையில் கிராம நிர்வாக அலுவலகம் சார்பில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் இருந்து வெளியேறும் மழைநீரை கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். முகாமில் நத்தம் நிலவரி திட்ட தாசில்தார் சுசீலா, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், கிராம நிர்வாக அதிகாரி அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் பேரூராட்சி
பாபநாசம் பேரூராட்சியை சேர்ந்த திருவையாத்துக்குடி, சருக்கை ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளத்தை தூர்வார வேண்டும். அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயை புதுப்பித்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்தனர்.
பாபநாசத்தில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையம், அரியலூர், சமயபுரம் ஆகியவற்றிற்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், பாபநாசம் வணிகர் சங்க தலைவர் குமார் ஆகியோர் கோரிகை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அண்ணாதுரை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதில் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, பாபநாசம் தாசில்தார் கண்ணன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் மஹாராஜன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story