பரப்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் குழந்தையால் பரபரப்பு போலீசார் விசாரணை


பரப்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் குழந்தையால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2019 3:30 AM IST (Updated: 26 Aug 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடி அருகே கிணற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இட்டமொழி, 

பரப்பாடி அருகே கிணற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் கோனார் (வயது 95). விவசாயியான இவர், முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் அதே கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது.

நேற்று மாலை அந்த கிணற்றில் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

யாரேனும் பச்சிளம் குழந்தையை கொன்று கிணற்றில் வீசினார்களா? அல்லது கள்ளக்காதல் மூலம் பிறந்து அதனால் அந்த குழந்தையை கிணற்றில் வீசினார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story