மாவட்டம் முழுவதும், போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 412 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 412 பேர் எழுதினர்.
தேனி,
தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை போலீசார், தீயணைப்பு வீரர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் தேனி கம்மவார் சங்க கல்லூரி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பகல்லூரி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மையங்களில் எழுத்து தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 710 ஆண்கள் மற்றும் 702 பெண்கள் உள்பட 8 ஆயிரத்து 412 பேர் எழுதினர். இந்த தேர்வை 1,752 பேர் எழுதவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற 7 மையங்களிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்வு எழுத வந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story