மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அண்ணா விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் நேற்று கராத்தே போட்டி நடந்தது.

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் நேற்று கராத்தே போட்டி நடந்தது. மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு அதன் தலைவர் சென்சாய் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற கராத்தே பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். செய்முறை விளக்கம், சண்டை போட்டி என இருபிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் (சப் -ஜூனியர்), 14, 15 வயதினர் (கேடட்), 16, 17 வயதினர் (ஜூனியர்) மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளுக்கு தேசிய கராத்தே சங்கத்தின் நடுவர் குழு தலைவர் காளசன் நடுவராக இருந்தார்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி சங்கத்தின் துணைத்தலைவர் ஜெயராமன் பேசினார். தொடக்கத்தில் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் சேவியர் டேவிட் நன்றி கூறினார்.

Next Story