கடனை திருப்பிகேட்ட கட்டுமான ஒப்பந்ததாரரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கடனை திருப்பிகேட்ட கட்டுமான ஒப்பந்ததாரரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 10:31 PM GMT)

கடனை திருப்பிக்கேட்ட கட்டுமான ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தானே, 

கடனை திருப்பிக்கேட்ட கட்டுமான ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

குத்திக்கொலை

தானேயை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் ஹமீத்கான்(வயது35). இவர் கட்டுமான தொழிலாளி ரிங்குமார் கவுதம்(25) என்பவருக்கு ரூ.20 ஆயிரம் கடனாக கொடுத்து உள்ளார். இந்தநிலையில் ரிங்குமார் கவுதம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை. எனவே ஹமீத்கான் அடிக்கடி அந்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரிங்குமார் கவுதம், கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தானே கோட்பந்தர் பகுதியில், கட்டுமான பணிகள் நடந்து வந்த இடத்தில் வைத்து ஹமீத்கானை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரிங்குமார் கவுதமை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு கட்டுமான ஒப்பந்ததாரர் ஹமீத்கானை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக தொழிலாளி ரிங்குமார் கவுதமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.

Next Story