கண்டிகை, ஊரப்பாக்கத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்


கண்டிகை, ஊரப்பாக்கத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கண்டிகை கிராமத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் நேற்று காலை நடைபெற்றது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கண்டிகை கிராமத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்குளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று உள்பட பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதேபோல ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் சி.கருணாகரன் தலைமையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் பூமகள் தேவி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Next Story