கிளாங்காட்டூரில் தூர்வாரி தயாராக உள்ள பண்ணைக்குட்டைகள்: மழை பெய்து நிரம்புமா என்று விவசாயிகள் ஏக்கம்
கிளாங்காட்டூர் கிராமத்தில் தூர்வாரப்பட்டு தயாராக உள்ள பண்ணைக்குட்டைகள் இந்த வருடமாவது மழை பெய்து நிரம்புமா என்று விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை வட்டாரத்தில் ஒரு பகுதி வைகை ஆற்று பாசனமாக இருந்தாலும் மற்றொரு பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. கடந்த 5 வருடங்களாக போதிய அளவு பருவ மழை இல்லாததால் வைகை ஆற்றில் நீர் வரத்தும் இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒருசில விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை சொந்த செலவில் அமைத்து சிறு தானியங்களை பயிரிட்டு வருகின்றனர்.
குறைந்த செலவில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கிளாங்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுதானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி உள்ளிட்டவைகளை விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர்.
இதனை வேளாண்மை அதிகாரிகள், மீன் வள அதிகாரிகள் ஊக்கப்படுத்தி விவசாயிகளை பாராட்டி உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை தூர்வாரி தயாராக வைத்திருந்தும், மழை பெய்யாததால் சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிடவில்லை. இந்த ஆண்டு அடுத்த (செப்டம்பர்) மாதம் பெய்யும் வடகிழக்கு பருவ மழையை நம்பி பண்ணைக் குட்டைகள் அனைத்தையும் விவசாயிகள் தூர்வாரி தயாராக வைத்துள்ளனர். மேலும் கடந்த முறை கால்நடைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் இந்த முறை வயல் வெளிகளை சுற்றிலும் அகழி போன்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் பண்ணைக் குட்டைகள் மற்றும் அகழியிலும் தண்ணீர் தேங்க வாய்ப்புண்டு. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அகழியில் போதுமான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே அகழியை ஒட்டி அகத்தி, வேம்பு, புளி உள்ளிட்ட மர வகை விதைகளை நடவு செய்துள்ளனர். பருவமழை பெய்தால் ஓரளவிற்கு பண்ணைகுட்டைகள் நிரம்பும், இதன் மூலம் சிறுதானிய வகைகள் சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த முறை அதிக செலவு செய்து குதிரைவாலி பயிரிட்டோம், மழை பெய்யாவிட்டாலும் பண்ணை குட்டையில் தேங்கிய தண்ணீரை வைத்து அதிக விளைச்சல் பெறப்பட்டது. இந்த ஆண்டும் மழையை நம்பி பண்ணைக்குட்டைகளை தூர்வாரி தயாராக வைத்துள்ளோம்.
தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே பண்ணைக் குட்டைகள் நிரம்ப வாய்ப்புண்டு. குதிரை வாலி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விதைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். பண்ணைகுட்டைகளை சுற்றிலும் அகத்தி விதையை நடவு செய்துள்ளோம். தற்போது அவைகள் துளிர்விட்டுள்ளன. பருவமழை பெய்தால் நன்கு வேர்விட ஆரம்பித்து விடும் என்றனர்.

Related Tags :
Next Story