கறம்பக்குடியில் இளைஞர்கள் நூதன பிரசாரம் எதிரொலி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அதிகாரிகள் ஆய்வு
கறம்பக்குடியில் இளைஞர்கள் நூதன பிரசாரம் எதிரொலி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அதிகாரிகள் ஆய்வு நிலத்தை அளவிடும் பணி தொடங்கியது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருந்த வெட்டுகுளம் காணாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதி இளைஞர்கள் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதில், காணாமல் போன குளத்தை மீட்க துணிச்சலான அதிகாரிகள் தேவை என கூறி பதவி பட்டியலையும் வெளியிட்டிருந்தனர். இந்த துண்டுபிரசுரம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளைஞர்களால் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பு குளத்தை புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி நலதேவன், வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா மேரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குளத்தை ஆக்கிரமித்து நடவு செய்திருந்த விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யும் படியும் அறிவுறுத்தினர். பின்னர் அரசு நில அளவையர்களால் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணி தொடங்கியது. இதற்கிடையே அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் விவசாயம் செய்து வருவதாகவும், பல்வேறு சிரமங்களுக்கிடையே பாடுபட்டு வளர்த்த பயிர்களை காக்க அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story