விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்-ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, கரூர் பஸ் நிலையம் அருகே, மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

கரூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, கரூர் பஸ் நிலையம் அருகே, மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 14 பேரை கைது செய்தனர். இதேபோல் குளித்தலை காந்திசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் குளித்தலை தொகுதி செயலாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிச்சமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜாவிடம் புகார் மனு அளித்தனர்.

Next Story