மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி கொள்ளிடம் ஆற்றில் 5 இடங் களில் மாட்டு வண்டியில் மணல் அள்ள குவாரி திறக்க கோரியும், திடீர், திடீரென மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடுவதை கைவிட்டு தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் சிவராஜ், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மற்றும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story