தஞ்சையில் பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரி டிராபிக்ராமசாமி திடீர் போராட்டம்


தஞ்சையில் பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரி டிராபிக்ராமசாமி திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரி டிராபிக்ராமசாமி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் அண்ணா பிறந்தநாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் சென்னையில் மாநாடு நடைபெறுகிறது.ள இது தொடர்பாகவும், அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா தொடர்பாகவும் அரசியல் கட்சியினரால் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதிக்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கோர்ட்டு உத்தரவுப்படி பேனர்கள் வைக்க கூடாது எனவும், இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அகற்றப்பட்டன

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிராபிக்ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்கள் உடனடியாக அகற்றப்படும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த 2 பேனர்களும் உடனடியாக அகற்றப்பட்டன. இதன் பின்னர் டிராபிக்ராமசாமி அங்கிருந்து கலைந்து சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story