கள்ளக்காதலியை துப்பாக்கியால் சுட்ட ரவுடி, கைது செய்ய பெங்களூரு போலீசார் வேலூரில் முகாம்


கள்ளக்காதலியை துப்பாக்கியால் சுட்ட ரவுடி, கைது செய்ய பெங்களூரு போலீசார் வேலூரில் முகாம்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:15 PM GMT (Updated: 27 Aug 2019 12:30 AM GMT)

பெங்களூருவில் கள்ளக்காதலியை துப்பாக்கியால் சுட்ட வேலூர் ரவுடியை பிடிக்க பெங்களூரு போலீசார் வேலூரில் முகாமிட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூரை சேர்ந்தவர் ரவுடி வீச்சு தினேஷ். இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட வீச்சு தினேஷ் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது வேலூர் மத்திய சிறையில் இருந்து அவர் காரில் வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

தொரப்பாடியில் வந்தபோது அவர்மீது மற்றொரு ரவுடியான வசூர் ராஜாவின் கூட்டாளியும், ரவுடியுமான நாகராஜ் மற்றும் சிலர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ரவுடி வீச்சு தினேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வெடிகுண்டு வீசியவர்கள் தப்பிசென்று விட்டனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை தேடிவந்தனர். ஆனால் நாகராஜ் தலைமறைவாகி விட்டார். அவருக்கும், அவருடைய கள்ளக்காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருடைய கள்ளக்காதலி பெங்களூருவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அவரை பின்தொடர்ந்து சென்ற நாகராஜ், பெங்களூருவில் வைத்து கள்ளக்காதலியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் குறிதவறியதால் கள்ளக்காதலி உயிர் தப்பினார். நாகராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் நாகராஜை தேடி வேலூரில் முகாமிட்டுள்ளனர். நாகராஜ் பயன்படுத்திய காரின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story