தஞ்சையில், இன்று நடக்கிறது காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்


தஞ்சையில், இன்று நடக்கிறது காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:15 PM GMT (Updated: 27 Aug 2019 6:41 PM GMT)

தஞ்சையில் இன்று(புதன்கிழமை) நடக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள் கிறார்.

தஞ்சாவூர்,

தி.மு.க. விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் தஞ்சை மகாராஜா திருமண மகாலில் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., செ.ராமலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.பி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்று பேசுகிறார்.

மு.க.ஸ்டாலின்

கருத்தரங்கை திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசுகிறார். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. கருத்தரங்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து பேசுகிறார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், விவசாய அணி அமைப்பாளர்கள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

கருத்தரங்கில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. முடிவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

Next Story