கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்


கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 28 Aug 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

தரகம்பட்டி,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வேல் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் ரவி கண்ணன், பொருளாளர் மணிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்திவேல், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

200 நாளாக...

போராட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாளாக மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story