புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம்: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விவாதம் - ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு


புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம்: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விவாதம் - ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 5:00 AM IST (Updated: 28 Aug 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து புதுவை சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை யின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று சபாநாயகர் மீது கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கிளப்பினார். அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வரு மாறு:-

ரங்கசாமி: நான் கொடுத்த நம்பிக்கை யில்லா தீர்மானத்தை எப்போது எடுக்கப் போகிறீர்கள்? உங்க ளால் சபையை நடுநிலையோடு நடத்த முடியாது. எனவே தீர்மானத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

சபாநாயகர் சிவக்கொழுந்து: நீங்கள் கொடுத்த கடிதத்தை சட்டசபை செயலாளர் என்னிடம் கொடுத்துள்ளார். அதற்கு இன்னும் காலக்கெடு உள்ளது. உங்களது கடிதம் ஆய்வில் உள்ளது.

முதல்-அமைச்சர் நாரா யணசாமி: சபாநாயகர் தனது ஆய்வை முடித்ததும் நம்பிக்கையில்லா தீர்மா னத்தை எடுப்பது குறித்து சொல்வார்.

சபாநாயகர்: உங்கள் கடிதத் துக்கு 14 நாள் கெடு உள்ளது.

கோபிகா (என்.ஆர்.காங்): எதிர்க்கட்சி தலைவரை அனாவசியமாக சீண்ட வேண்டாம்.

அரசு கொறடா அனந்த ராமன்: அலுவல் விதிப்படி நம்பிக்கையில்லா தீர்மா னத்தை எடுக்க 14 நாள் காலஅவகாசம் உண்டு.

அமைச்சர் கமலக்கண்ணன்: எதிர்க்கட்சி தலைவர் இந்த மாநிலத்தின் முதல்- அமைச்ச ராக இருந்தவர். சட்டம் தெரிந்தவர். சபாநாயகருக் கான அதிகாரம் குறித்தும் தெரிந்தவர். சபாநாயகர் அலுவல் விதிப்படிதான் செயல்படுவார். அதுவரை காத்திருங்கள்.

ரங்கசாமி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள்? அதற்கு பதில் சொல்லுங்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில் நீங்கள் சபையை நடத்த லாமா?

(இதைத்தொடர்ந்து ரங்க சாமிக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்த மாக எழுந்து நின்று பேசினார் கள்)

என்.எஸ்.ஜே.ஜெயபால்: தீர்மானத்தை எடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்?

நாராயணசாமி: சபாநாய கரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

எம்.என்.ஆர்.பாலன் (காங்): தீர்மானம் கொடுக் கப்பட்டால் சபையை நடத்தக் கூடாது என்று அலுவல் விதியில் எந்த இடத்திலும் இல்லை.

அன்பழகன் (அ.தி.மு.க.): அலுவல் விதி 251-ன்படி சபாநாயகர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொடுக் கப்பட்டால் 14 நாட்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் என்றுதான் உள்ளது.

நாராயணசாமி: எதிர்க்கட்சி தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி கேட்டார். அதற்கு சபாநாயகர் பரிசீல னையில் உள்ளது என்று கூறினார். உடனடியாக அதை எடுங்கள் என்று சபாநாயக ரிடம் கூற யாருக்கும் அதிகாரம் கிடையாது.

எம்.என்.ஆர்.பாலன்: நியமன எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு ஆலோசனை கூறத் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

சாமிநாதன் (பா.ஜனதா): சுப்ரீம் கோர்ட்டு எங்களை சட்டசபைக்குள் அனுப்பி உள்ளது. எனவே உரிமை பற்றி பேசாதீர்கள்.

சபாநாயகர்: பேரவை விதிப் படி நம்பிக்கையில்லா தீர்மான விஷயத்தில் நடக்கும்.

செல்வகணபதி (பா.ஜனதா): ஒவ்வொரு கூட்டத் திலும் நியமன எம்.எல்.ஏ.க்களை பற்றி பேசுகிறார்கள். நாங்கள் விதிகளை தெரிந்து கொண்டுதான் வந்துள்ளோம். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி கிடையாது என்று யாரும் சொல்லக்கூடாது.

சபாநாயகர்: நம்பிக்கை யில்லா தீர்மானம் தொடர் பான விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு 14 நாள் அவகாசம் உள்ளது.

இதைத்தொடர்ந்து தனது நம்பிக்கையில்லா தீர்மா னத்தை சபையில் எடுத்துக் கொள்வது பற்றி தெரிவிக் கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு எதிர்க் கட்சி தலைவர் ரங்கசாமி சபையைவிட்டு வெளியேறி னார். அவரை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகு மாறன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களான சாமி நாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

அன்பழகன்: நம்பிக்கை யில்லா தீர்மானத்தை எடுத் துக்கொள்ளப் போகிறீர்களா? இல்லையா?

சபாநாயகர்: அது ஆய்வில் உள்ளது.

அன்பழகன்: நம்பிக்கை யில்லா தீர்மானத்தின் நிலை குறித்து தெரியவில்லை. இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு கூறிவிட்டு அன்ப ழகன் எம்.எல்.ஏ. சபை யிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Next Story