ஆட்டோ- கார் மோதல்: வேளாங்கண்ணிக்கு சென்ற பக்தர் உள்பட 6 பேர் படுகாயம்


ஆட்டோ- கார் மோதல்: வேளாங்கண்ணிக்கு சென்ற பக்தர் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேளாங்கண்ணிக்கு சென்ற பக்தர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அத்திப்புலியூரை சேர்ந்தவர் மோகன்தாஸ்(வயது35). இவர் தனக்கு சொந்தமான ஒரு ஆட்டோவில் நேற்று பயணிகள் சிலரை ஏற்றிக் கொண்டு நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். சிக்கல் பழைய சினிமா தியேட்டர் அருகே ஓரு வளைவில் சென்ற போது அவர் ஆட்டோவை திருப்பினார். அப்போது எதிரில் நாகையில் இருந்து கீழ்வேளூர் நோக்கி வேகமாக வந்த ஒரு கார், எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி அதே வேகத்தில் சாலையில் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற மரிய டேவிட் (40) என்பவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

வழக்குப்பதிவு

மேலும் ஆட்டோவில் சென்ற மோகன்தாஸ், மாப்பிள்ளை குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(40), அதே ஊரை சேர்ந்த அன்பழகன் (52), திருநெல்லிக்காவல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (32), வைப்பூரை சேர்ந்த விஸ்வநாதன் (65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story