தானேயில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது ஹெல்மட் அணியாமல் வந்ததால் போலீசில் சிக்கினான்
தானேயில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டான். திருட்டு மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணியாமல் வந்ததால் போலீசாரிடம் சிக்கினார்.
தானே,
தானே கல்வா பகுதியில் சம்பவத்தன்று போக்குவரத்து போலீஸ்காரர் ஜெய்வந்த் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வாலிபர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதைக்கண்ட போலீஸ்காரர் ஜெய்வந்த் அந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். மேலும் அவரிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்டு உள்ளார். ஆனால் அவரிடம் ஓட்டுனர் உரிமம் எதுவும் இல்லை. வாகனத்துக்குரிய ஆவணமும் இல்லை. இதனால் அந்த வாலிபர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே போலீசார் மோட்டார் சைக்கிளை புகைப்படம் எடுத்து இ-செலான் அனுப்ப மோட்டார் சைக்கிள் பதிவெண் மூலம் குறுந்தகவல் அனுப்பினார்.
இந்த குறுந்தகவல் கல்யாணை சேர்ந்த சுபாஷ் என்பவரின் செல்போனிற்கு சென்றது. இதனை கண்ட அவர் உடனே கல்வாவிற்கு விரைந்தார். மேலும் போலீஸ்காரர் ஜெய்வந்திடம் சென்று தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாகவும், இது தொடர்பாக கல்யாண் போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் திருட்டு ஆசாமி என்பது அவருக்கு தெரியவந்தது.
விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் சுதர்சன் வாக்மாரே(வயது23) என்பதும், அவர் சுபாசின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story