கடை அருகே எச்சில் துப்பியதை கண்டித்ததால் தேங்காய் வியாபாரி அடித்து கொலை - வாலிபர் கைது
கடை அருகே எச்சில் துப்பியதை கண்டித்த தேங்காய் வியாபாரியை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை மெரின் லைன்ஸ் பகுதியில் உள்ள நடைபாதையில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தவர் முகமதுஅலி (வயது63). இவர் நேற்று முன்தினம் காலை தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந் தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தேங்காய் வியாபாரி கடையின் அருகில் எச்சில் துப்பினார்.
இதனால் அவர், வாலிபரை கண்டித்தார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வாலிபர் அங்கு கிடந்த மூங்கில் கம்பை எடுத்து தேங்காய் வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், படுகாயம் அடைந்த தேங்காய் வியாபாரி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயங்களுடன் கிடந்த தேங்காய் வியாபாரியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆசாத் மைதான் போலீசார் தேங்காய் வியாபாரியை படுகொலை செய்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ராஜேஸ் விஸ்கர்மா(வயது30) என்பது தெரியவந்தது.

Related Tags :
Next Story