மாவட்டத்தில், அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்


மாவட்டத்தில், அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 10:35 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டாக்டர்கள் ராமநாதன், சதீஷ், கோபி ஆகியோர் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதில் பேசிய டாக்டர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்த அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்த வேண்டும். காலி பணி யிடங்களை மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கைக்கு அல்லாமல் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக சென்னையில் டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். டாக்டர் களின் போராட்டம் காரணமாக நேற்று ஒரு நாள் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. அவசர நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர்.

இதே போல் மாவட்டத்தில் ஓசூர், பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில், 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Next Story